18
Feb 2026
உதவும் கரங்கள்
Wednesday, February 18, 2026
ரமழான் மாதத்தை முன்னிட்டு எமது கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற “உதவும் கரங்கள்” வேலைத்திட்டம் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இத்திட்டத்தினூடாக ரூபா 6,000/- பெறுமதியான 25 உலர் உணவு பொதிகள் தேவையுள்ள மாணவர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
இந்த சமூகப்பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க ஆதரவு வழங்கிய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், குறுகிய காலத்திற்குள் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தி, அர்ப்பணிப்புடன் இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்த மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, வழிகாட்டிய பொறுப்பாசிரியர்களுக்கும் விசேஷ நன்றியும் பாராட்டுகளும்.
“உதவும் கரங்கள் — இணைக்கும் இதயங்கள்.”
helping hands
enasalgolla cc
enasalgolla central college